ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 87 ஆயிரம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 87 ஆயிரம் பறிமுதல்
X

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேர்தல் பறக்கும்படை வாகன சோதனையில் 87 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலரான போத்திராஜ் தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த மோட்டார்பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தை ஒட்டி வந்தவரிடம் ரூ.87 ஆயிரம் பணம் தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்ததில் அவரிடம் அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.

மேலும் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு வாகனம் ஓட்டி வந்தவரையும் அவரிடமிருந்த பணத்தையும் சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனத்தில் பணம் கொண்டு சென்றவர் ஆலங்குளம் வங்கியின் வங்கி தொடர்பாளர் ரவிச்சந்திரன்(52) என்பதும் அந்த பணம் வங்கி பணம் என்பதும் தெரிய வந்ததையடுத்து சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு உத்தரவாத கடிதம் பெற்றுக்கொண்டு பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!