சாத்தூர் விபத்து: 6 பேர் மீது வழக்கு பதிவு

சாத்தூர் விபத்து: 6 பேர் மீது வழக்கு பதிவு
X

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நேற்று பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 26 பேர் சாத்தூர், சிவகாசி மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தூர் மாவட்ட எஸ்பி., பெருமாள் தலைமையில் போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!