குடோனில் பதுக்கப்பட்ட 5.50 லட்சம் புகையிலை பறிமுதல்

குடோனில் பதுக்கப்பட்ட 5.50 லட்சம் புகையிலை பறிமுதல்
X

சாத்தூர் அருகே அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.50 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (32). இவர் சாத்தூர் மார்க்கெட் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சாத்தூர் அருகே இராமலிங்காபுரத்தில் அனுமதியின்றி புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சாத்தூர் டிஎஸ்பி., இராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சாத்தூர் டிஎஸ்பி.,இராமகிருஷ்ணன் தலைமையில் அம்மாபட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் இராமலிங்கபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரின் குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5.50 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை 68 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அம்மாபட்டி போலீசார் அந்த குடோனில் பதுக்கி வைக்கபட்டிருந்த 68 புகையிலை மூடைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இராமகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்