சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 3 பேர் கைது

சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 3 பேர் கைது
X

சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 3 பேரை சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தால்நாயக்கன் பட்டி கண்மாய் அருகில் அனுமதியின்றி சோல்சா வெடியுடன் நின்று கொண்டிருந்த சிவகாசி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்த முத்துவசந்த் (வயது 30), முனியசாமி (33), மாரியப்பன் (38) ஆகிய 3 பேரிடம் இருந்து 12 கிலோ சோல்சா வெடியை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story