சாத்தூர்: சிவாஜி கணேசன் நினைவுதினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

சாத்தூர்: சிவாஜி கணேசன் நினைவுதினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
X

சிவாஜி கணேசன் நினைவு தினம்

சிவாஜி கணேசன் நினைவுதினத்தையொட்டி சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவாஜி கணேசன் நினைவுதினத்தையொட்டி சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பிரபு நற்பணி மன்ற தலைவர் வேல்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் சந்திரன், சிவாஜி மன்ற செயலாளர் சிந்தியப்பன், சாத்தூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பையா, சிவாஜிமன்ற மாவட்ட செயலாளர் சுதர்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story
ai automation in agriculture