சாத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தினகரன் நாளிதழ் வாங்குவதற்கு தீர்மானம்

சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தினகரன் நாளிதழ் வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சாத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தினகரன் நாளிதழ் வாங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தினகரன் நாளிதழ் வாங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் தீர்மானத்தை வாய்மொழியாக ஒவ்வொன்றாக வாசித்து காண்பித்தார். இடைமறித்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கவிதா கருப்பசாமி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகளை கண்டுபிடித்த நேர்மையான அலுவலர் ஒன்றிய மேற்பார்வையாளர் கற்பக செல்வம் ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஒன்றிய மேற்பார்வையாளர் கற்பக செல்வம் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.நேர்மையான அலுவலரை இடமாற்றம் செய்ததை வன்மையாக கண்டித்து கூட்டத்தில் இருந்து அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கவிதா கருப்பசாமி வெளிநடப்பு செய்தார்.
மேலும் கூட்டத்தில் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 46 ஊராட்சியில் உள்ள நூலகத்திற்கு தினகரன் நாளிதழ் வாங்கப்படும் என்று தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இடைமறித்த பாரதிய ஜனதா ஒன்றிய கவுன்சிலர் வேலுச்சாமி மக்கள் வரிப்பணத்தில் இருந்து 46 பஞ்சாயத்துகளுக்கு தினகரன் நாளிதழ் மட்டும் ஏன் வாங்க வேண்டும் மற்ற முன்னணி தமிழ் நாளிதழ் ஆங்கில நாளிதழ் வாங்கலாம் என தெரிவித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ் மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு இணங்க சாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 46 ஊராட்சிகளில் உள்ள நூலகத்திற்கு தினகன் நாளிதழ் வாங்கப்படும் என தெரிவித்தார்.மேலும் கவுன்சிலர்கள் உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் என்று தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய கவுன்சிலர் வேலுச்சாமி தினகரன் நாளிதழ் மட்டும் ஊராட்சிகளுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து வாங்கப்படுவது ஒருதலைப்பட்சமான சட்டத்திற்கு புறம்பானது இதை நான் எதிர்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அவருடைய சொந்த பணத்திலிருந்து சாத்தூர் ஊராட்சிகளுக்கு தினகரன் நாளிதழை வாங்கி இலவசமாக தாராளமாக கொடுக்கலாம் என்று தெரிவித்தார். இறுதியில் அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானத்திற்கு கையெழுத்திட்டு சென்றார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu