சாத்தூரில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது.

சாத்தூரில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது.
X
சாத்துாரில் மது பாக்கெட்டுகள் விற்பனை.
மது பாட்டில்கள் இல்லாததால் அடுத்த மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் ஒருவர் கைது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகில் அம்மாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரயில் நிலையத்திலிருந்து கையில் பையுடன் இளைஞர் வருவதை பார்த்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார். அப்போது கையில் வைத்திருந்த பையில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் சாத்தூர் அருகே அம்மாபட்டியை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது இதையடுத்து அம்மாபட்டி போலீஸார் சிவாவை கைது செய்து அவரிடம் இருந்த 77 வெளிமாநில மது பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!