சிறுமிக்கு பாலியல் தொல்லை - வடமாநிலத்தை சேர்ந்தவரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை - வடமாநிலத்தை சேர்ந்தவரை  போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
X
சாத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

சாத்தூர் அருகே நீராவிப்பட்டி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில முதியவரை கிராம பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நீராவிப்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரிலுள்ள பெரும்பாலோர் விவசாய பணியை பிரதானமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் ஊருக்குள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ஊரின நடுத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியிடம் முன்பின் அடையாளம் தெரியாத வடமாநில முதியவர் கையைப் பிடித்து இழுத்துள்ளார்

இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி அதிர்ச்சியில் பயந்து கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த ஊர் பொதுமக்கள் சிறுபிள்ளைகளை திருட வந்தவன் என்று நினைத்து கட்டி வைத்து அடித்துள்ளனர்.

அடிதாங்க முடியாமல் வடமாநில முதியவர் புரியாத பாஷையில் பேசியுள்ளார். பொதுமக்கள் முதியவர் பேசியது புரியாததால் குழப்பத்தில் இருக்கன்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த இருக்கன்குடி போலீசார் முதியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் வட மாநில முதியவர் மனநலம் சரியில்லாதவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஊர் பொதுமக்கள் அடித்ததில் காயம் அடைந்ததால் அவருக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!