பட்டாசுஆலை வெடி விபத்து வழக்கு, உரிமையாளர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த பிப் 12 ம் தேதி அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் . மேலும் 26 பேர் காயங்களுடன் சாத்தூர், சிவகாசி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, ஆலை குத்தகைதாரர் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சக்திவேல் ,கீழச்செல்லையாபுரத்தைச் சேர்ந்த பொண்ணுபாண்டி, ராஜா, வேல்ராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 5 தனிப்படை அமைத்து போலீசார் தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வந்தனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணமாக இருந்த நபர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கீழச்செல்லையாபுரத்தைச் சேர்ந்த பொண்ணுபாண்டியை ஏழாயிரம்பண்ணை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்ற நிலையில் தலைமறைவாக இருந்த பிரதான குத்தகைதாரர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஜெயராமு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பட்டாசுஆலை உரிமையாளர் சந்தனமாரியை தனிப்படை போலீசார் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து கைது செய்து ஏழாயிரம்பண்னை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீதமுள்ள 3 பேரையும் இன்னும் சில தினங்களில் கைது செய்வோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu