வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை: அமைச்சர் வழங்கினர்
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிலாளா்கள் 20 போ் உயிரிழந்த நிலையில் 20க்கு மேற்பட்டவா்கள் சாத்தூர் மற்றும் சிவகாசியில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களுக்கு அரசு சார்பில் 3 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் நிவாரண தொகை வழங்கப்படுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. இராஜேந்திரபாலாஜி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் 17 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த மூன்று லட்ச ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். மேலும் வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தமிழக அரசு அறிவித்த ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சா் கே.டி.இராஜேந்திரபாலாஜி சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி உயிர் இழப்பு ஏற்படுவதால் தி.மு.க உள்ளிட்ட சில இயக்கங்கள் பட்டாசு தொழிலை நிறுத்த வேண்டும் என்றுகூறுகின்றனர். உயிரிழப்பு என்பது எல்லா தொழிலும் இருக்கின்றது ஆனால் பட்டாசு தொழிலில் மட்டும் உயிரிழப்பு வெளியில் தெரிகிறது. எனவே தமிழக முதலமைச்சர் உயிரிழப்பை தடுக்க விரைவான நடவடிக்கை எடுத்துள்ளார் நிவாரணமும் அறிவித்துள்ளார் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார் இதுபோன்ற சம்பவங்கள் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சரின் எண்ணம். இதில் பட்டாசு தொழிலை நிறுத்த வேண்டும் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்க வேண்டும் என்று தி.மு.கவின் பொதுச்செயலாளர் அறிக்கை விடுத்தது சங்கடமாக உள்ளது. தி.மு.கவினர் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இந்த தொழிலை நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். பட்டாசு தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே பட்டாசு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. பட்டாசு தீப்பெட்டிக்கு நல வாரியம் தமிழக முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். தாய் தந்தையை இழந்த நடுசுரங்குடி நந்தினிக்கு தேவையான படிப்பு செலவினை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் அந்தக் குழந்தைக்கென தனி கவனம் செலுத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாக நாங்கள் கவனித்துக் கொள்வோம், தாய் தந்தை இழந்த குழந்தைக்கு எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தாய் தந்தை இழப்பு நிவர்த்தி செய்ய முடியாத ஒரு குறையாக இருக்கும் எனவே அந்த குழந்தையை கவனித்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என்றார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu