வெடி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்

வெடி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்
X

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் நடந்த வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை தமிழக கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.

சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை தமிழக கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஆலைகளையும் பார்வையிட்டார்.

மேலும் இந்த வெடிவிபத்தில் காயமடைந்து சாத்தூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் சாத்தூர் காவல் துணைகண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!