வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி: முதலமைச்சர் அறிவிப்பு

வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி: முதலமைச்சர் அறிவிப்பு
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது :

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஐந்து பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று இலட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு இலட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!