இராஜபாளையம் அருகே புத்தூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

இராஜபாளையம் அருகே புத்தூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
X

இராஜபாளையம் அருகே புத்தூரில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இராஜபாளையம் அருகே புத்தூரில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இராஜபாளையம் அருகே புத்தூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை கால்நடை துணை இயக்குனர் கோவில்ராஜ் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துரை சார்பில் சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாமை கால்நடை துணை இயக்குனர் கோவிராஜ் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டம் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்க்கப்படுகிறது. அவ்வழியில் வாயில்ல ஜீவான்களான கால்நடைகளின் நலன்காக்க கால்நடைகள் இருக்கும் பகுதிக்கே சென்று மருத்துவ முகாம் அமைக்கும் சிறப்புவாய்ந்த திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து முகாமை பார்வையிட்டு கால்நடைகளுக்கு மருந்துகளையும் உணவுகளையும் வழங்கினார் மேலும் சிறப்பாக கால்நடையை பராமரிப்பு செய்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் உதவி இயக்குனர் ராஜேஷ்வரி பொதுக்குழ உருப்பினர் கனகராஜ் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் துரை கற்ப்பகராஜ் ஒன்றிய கவுன்சிலர் நவமணி பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சிங்கப்புலி அண்ணாவி ஒன்றிய துணை செயலாளர் நல்லுச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி