வாகனசோதனை- ரூ.79 ஆயிரம் பறிமுதல்

வாகனசோதனை- ரூ.79 ஆயிரம் பறிமுதல்
X

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ. 79 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் 6 குழுவினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று இரவு பறக்கும் படை கண்காணிப்பு அலுவலர் பொன்லட்சுமி தலைமையில், போலீசார் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் முதுமுடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சங்கரன் கோவிலில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி மோட்டார்பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவரிடம் ரூ. 78,800 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது.

விசாரணையில் அவர் வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுக சாமி என்பதும், எண்ணெய் ஆலை நடத்தி வருவதும் தெரிய வந்தது. தான் விற்பனை செய்த எண்ணெய் கேன்களுக்கான பணத்தை வசூல் செய்து விட்டு திரும்பி வருவதாக கூறி உள்ளார்.ஆனால் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சசிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story