வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தங்கபாண்டியன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தங்கபாண்டியன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

இராஜபாளையம் அருகே N.புதூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே Nபுதூர் பகுதியில் இந்திய விடுதலைக்கு முதல் வீரம் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் துரை கற்பகராஜ், பொது குழு உறுப்பினர் கனகராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞானராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவண முருகன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி, மற்றும் ஊர் நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்