வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இராஜபாளையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இராஜபாளையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே என்.புதூர் பகுதியில் இந்திய விடுதலைக்கு முதல் வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணிசெயலாளர் இனியபாரதி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதாதனசேகரன் மற்றும் ஊர் நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்