இராஜபாளையம் வட்டார வேளாண் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த பயிற்சி

இராஜபாளையம் வட்டார வேளாண் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த பயிற்சி
X

தேவதானம் கிராமத்தில் வைத்து தேசிய நீடித்த நிலையான வேளாண் திட்டத்தின் கீழ் மண்வளம் குறித்த பயிற்சிகள் நடைபெற்றது.

வேளாண் உழவர் நலத்துறை சார்பில் தேவதானம் கிராமத்தில் வைத்து வேளாண் திட்டத்தின் கீழ் மண்வளம் குறித்த பயிற்சிகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டாரத்தை வேளாண் உழவர் நலத்துறை சார்பில் தேவதானம் கிராமத்தில் வைத்து தேசிய நீடித்த நிலையான வேளாண் திட்டத்தின் கீழ் மண்வளம் குறித்த பயிற்சிகள் நடைபெற்றது.

இப்பயிற்சியில் ராஜபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா வரவேற்புரை. வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன் தலைமையேற்று தலைமை உரையில் மண்வளம் குறித்த முக்கியத்துவத்தையும் மண்வளத்தை பாதுகாக்க இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.

மேலும் இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் பத்மாவதி கலந்து கொண்டு உயிர் உரங்களின் முக்கியத்து வத்தையும் உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். பாக்கியராஜ் வேளாண்மை அலுவலர் மாநில திட்டம் அவர்கள் நுண்ணூட்டசத்துகள் வகைகள் அவை பயன்படுத்தும் முறைகள், அவற்றின் குறைபாடினால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் விருதுநகர் மண் பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் கணேசன் ஆற்றிய தொழில்நுட்ப உரையில் மண் மாதிரி சேகரிப்பு முறை பற்றியும், மண்பரிசோதனை அட்டையின் படி உரமிடுதல் பற்றியும், வேளாண்மை அலுவலர் தனலட்சுமி பயிர்களுக்கு உரமிடும் முறைகள் ,அதனை பயிரின் பருவத்திற்கு ஏற்ப பிரித்து உரமிடுதல் பற்றியும் , சொட்டு நீர் பாசன நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிர்களுக்கு உரமிடும் முறை பற்றியும் விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்.

இப்பயிற்சிக்கான ஏற்பாட்டை உதவி வேளாண்மை அலுவலர் ஜீவா மற்றும் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் வனஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி