வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி
X

வத்திராயிருப்பு முத்தாலம்மன்பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன்பஜார் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

.வத்திராயிருப்பில் முத்தாலம்மன் பஜார் பகுதி முக்கியமான பகுதியாக உள்ளது. மகாராஜபுரம், கோட்டையூர், அழகாபுரி, பேரையூர், மதுரை, கூமாப்பட்டி, கான்சாபுரம், பிளவக்கல் அணை ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக தான் செல்கின்றன.

இதனால் பஜார் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!