ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் தரிசனம்

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் தரிசனம்
X

ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், தெப்ப உற்சவம் நடைபெற்றது.

ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், தெப்ப உற்சவம் நடைபெற்றது.

ராஜபாளையத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், ஆண்டு தோறும் மாசி மகம் மகா பிரம்மோற்சவம் விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 7ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா எடுத்து வரப்பட்டது. 7 ம் நாள் திருவிழாவான நேற்று அம்மன், சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

8 வது நாளான இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நடைபெற்றது. சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் அம்பாள் சமேத சுவாமி தெப்பதேர் 7 முறை தெப்பத்தை சுற்றி வந்தது.

இந்த நிகழ்ச்சியில், நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராஜபாளையம் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர், தீ அணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!