வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன், மனைவி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன், மனைவி
X

ராஜபாளையம் அம்பேத்கர் நகர் காலனி பகுதியில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

ராஜபாளையத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அம்பேத்கர் நகர் காலனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.

ராஜபாளையம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அம்பேத்கர் நகர் காலனி பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விபத்து. மேலும் அப்பகுதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. மேலும் இன்று மாலை நேரத்தில் பெய்த மழையினால் அம்பேத்கர் நகர் காலனி பகுதியில் வசித்து வரும் சேவகன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. மேலும் அதிர்ஷ்டவசமாக கணவன் சேவகன், மனைவி அகிலா இருவரும் இடிபாடுகளில் சிக்காமல் உயிர் தப்பினர்.

மேலும் மழை பரவலாக பெய்து வருவதால் அம்பேத்கர் நகர் பகுதி முழுவதும் மழைநீர் ஆங்காங்கே தேங்கியும், வீட்டுக்குள் உட்புகும் நிலை உள்ளது. மேலும் இந்தப் பகுதி அவல நிலைக் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் மேலும் மழை காரணமாக இந்த வீட்டினை சீரமைத்து தருமாறும் நிவாரணம் வழங்கக்கோரியும் பாதிக்கப்பட்ட தம்பதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு