இராஜபாளையத்தில் தனியார் பஞ்சு உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

இராஜபாளையத்தில் தனியார் பஞ்சு உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
X

இராஜபாளையத்தில் தனியார் மருத்துவ பஞ்சு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் பாேராடி அணைத்தனர்.

இராஜபாளையம் தனியார் மருத்துவ பஞ்சு தொழிற்சாலையில் தீடீர் தீ விபத்து. 6 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சேதம்.

இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் தனியார் மருத்துவ பஞ்சு உற்பத்தி தொழிற்சாலையில் தீடீர் தீ விபத்து. சுமார் 6 லட்சம் மதிப்பிலான ஏற்றுமதி பஞ்சுகள் தீயில் எரிந்து சேதம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான மருத்துவ துறைக்கு பயன்படுத்தும் பஞ்சுகள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இன்று மாலை பஞ்சுகள் சேமிப்பு கிடங்கில் தீடீரென தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியுள்ளது. இந்த தகவலறிந்து வந்த இராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் கரும்புகை சூழ்ந்து எரிந்து கொண்டிருந்த தீயை அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வட காவல் நிலைய போலீசார் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சேதமானது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!