தேங்கி நிற்கும் கழிவுநீர்; சீரமைக்க மக்கள் கோரிக்கை

தேங்கி நிற்கும் கழிவுநீர்; சீரமைக்க மக்கள் கோரிக்கை
X

பைல் படம்.

ராஜபாளையத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மதுரைராஜா கடைத்தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ஆதலால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் மருத்துவமனை, கோவில் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் இந்த வழியாக தினமும் எண்ணற்ற மக்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதேபோல், ராஜபாளையத்தில் உள்ள அனைத்து தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட போது சேதமடைந்தது. அதனை சரி செய்யாமல் விட்டதால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

எனவே கால்வாயை சீரமைத்து கழிவுநீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture