கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை
X

இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து சிறப்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் திருவிழா உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை.

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து சிறப்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் திருவிழா உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் இயேசுபிரான் பிறந்த தினமான இன்று கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காலமாக எந்த ஒரு விழாவும் கொண்டாடப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாடுவது மிக மகிழ்ச்சியாக உள்ளதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் தற்போது உருமாறிய ஒமைக்ரான் தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனையும் ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார் .

அதிகாலை சிறப்பு பிரார்த்தனை சபைகுரு ஜான் கமலேசன் ஆராதனையுடன் சிறப்பு ஜெபம் செய்து முடித்து வைத்தார் விழா ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாட்டுப் போட்டி மற்றும் கிராம சபை கூட்டு பிரார்த்தனை நடைபெறும் அதிலும் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!