சத்திரப்பட்டி அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

சத்திரப்பட்டி அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

சத்திரப்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை சாத்தூர் எம்எல்ஏ இரகுராமன்,  இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சத்திரப்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை சாத்தூர் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாமை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இரகுராமன் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பேசிய ஒன்றிய பெருந்தலைவர் இந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு அதிக அளவில் சிறப்படைய வேண்டுமாறு கேட்டு கொண்டார்.

இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் துரை கற்ப்பகராஜ் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, மருத்துவ அலுவலர் பாலசுப்ரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் வீரபத்திரன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare