கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசிய எம்.எல்.ஏ

கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசிய எம்.எல்.ஏ
X
இராஜபாளையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட விவசாயிகள் கலந்தாய்வு மன்றத்தை திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் திறந்து வைத்து பேசினார்.

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள சிங்கராஜா கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கடன் சங்க வளாகத்தில் விவசாயிகள் கலந்தாய்வு மையம் அமைக்கப்பட்டது. கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருப்பது போல், கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைக்கப்பட்ட விவாசயிகள் கலந்தாய்வு மன்றத்தை, நேற்று திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

முன்னதாக மன்றத்தின் முன் இருந்த தேசியக் கொடி மற்றும் கூட்டுறவு சங்க கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ பேசும் போது, தான் இரண்டாவது முறையாக சட்டப் பேரவை உறுப்பினராகி கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைத்தது என்பது, முதன் முறையாக தீபம் ஏற்றும் போது, புயல் மழையோ என்ற பாடலின் வரிகள் போன்று தனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது என்றும், விவசாயிகளுக்கு என்றும் உறுதுணையாக நிற்பேன் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்