கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு ரூ.50 ஆயிரம்: எம்எல்ஏ வழங்கல்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின்   குடும்பத்தினர்க்கு ரூ.50 ஆயிரம்: எம்எல்ஏ வழங்கல்
X

இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்த 26 நபர்களின் குடும்பத்தினர்க்கு தலா 50 ஆயிரம் ரூபாயை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் வழங்கினார்.

கொரோனாவால் உயிரிழந்த 50 நபர்களில் முதல்கட்டமாக 26 நபர்களின் குடும்பத்தினர்க்கு 50 ஆயிரம் ரூபாயை எம்எல்ஏ வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்த 50 நபர்களில் முதல்கட்டமாக 26 நபர்களை சார்ந்த குடும்பத்தினர்க்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தலா 50 ஆயிரம் ரூபாயை சட்டமன்ற உருப்பினர் தங்கப்பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக இருந்ததை தற்போது முதல்வராக பொறுப்பேற்றவுடன் சீரிய முயற்சியாலும் நடவடிக்கையாலும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது

விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் எனவும், தமிழக முதல்வர் சிறப்பான பணியை மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார் எனக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நகர பொறுப்பாளர் (தெற்கு) ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சரவணன், ராதாகிருஷ்ணராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!