மழையால் பாதித்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்

மழையால் பாதித்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்
X

இராஜபாளையம் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.3 லட்ச மதிப்பிலான நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்கினார்.

இராஜபாளையம் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.3 லட்ச மதிப்பிலான நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பருவ மழையின் போது வீடு இடிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் பருவ மழையின் போது வீடுகள் இடிந்து மற்றும் மேற்கூரைகள் இடிந்து சேதமடைந்தது என வட்டாச்சியர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாச்சியர் தலைமையில் வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட இடந்தை பார்வையிட்டனர்.

120 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் முதற்கட்டமாக அரிசி பருப்பு போர்வை பாய் மற்றும் தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவிகளை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்குவதற்கு முன் வந்து அவருடைய சொந்த பணத்தில் 3 லட்ச ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்களை 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!