/* */

இராஜபாளையம் அரசு பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம்: எம்எல்ஏ திறப்பு

சேத்தூர் அரசு பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாகத்தை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

இராஜபாளையம் அரசு பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம்: எம்எல்ஏ திறப்பு
X

சேத்தூர் சேவுகப் பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதியதாக சுகாதார வளாகத்தை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார்.

இராஜபாளையம், சேத்தூர் சேவுகப் பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சுகாதார வளாகம் மற்றும் பேவர்பிளாக் தளம் அமைக்கப்பட்டது. இதனை பள்ளி மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார்.

மேலும் பள்ளியின் சார்பாக மாணவ மாணவிகள் அமரவும் எழுதவும் இருக்கைகள் 100 எண்ணம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதற்கு சட்டமன்ற உறுப்பினர் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறினார். மேலும் பள்ளியில் நடைபெற்ற பொதுமருத்துவ முகாமை பார்வையிட்டு மாணவ மாணவிகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.

ஆசிரியப் பெருமக்கள் பள்ளிக்கு காலை மாலை மாணவிகள் வரும் போது போக்குவரத்து இடையூறாக உள்ளதால் போக்குவரத்தை சரிசெய்ய கோரிக்கை வைத்தனர் தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளரிடம் போக்குவரத்து சரிசெய்ய கேட்டுக்கொண்டார்

இந்நிகழ்ச்சியில் DEO முத்தையா பள்ளி தலைமையாசியர் சிவகுமாரி திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பள்ளி ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Nov 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்