விநாயகர் சிலை தயார் செய்ய விதிக்கப்பட்டடுள்ள தடையை நீக்க கோரிக்கை

விநாயகர் சிலை தயார் செய்ய விதிக்கப்பட்டடுள்ள தடையை நீக்க கோரிக்கை
X

இராஜபாளையம் தர்மபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற ராமராஜ்.

இராஜபாளையத்தில் விநாயகர் சிலை தயார் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்ப பெற தமிழக அரசுக்கு கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தர்மபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பைக்கு அடுத்தபடியாக இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெறும். அதே நேரத்தில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், நலிந்த வசதியற்ற பெண்களுக்கு இலவசமாக திருமண சீர்வரிசை என விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள் .

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக நீதிமன்ற உத்தரவின்பேரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்க்கு முன்பாகவே சிலை தயார் செய்யும் பணி துவங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சிலை தயார் செய்யும் பணி துவங்குவதற்கு இந்து அறநிலைத்துறை அனுமதி பெற்று வேலை நடத்த, இராஜபாளையம் மாயூரநாதர் சாமி திருக்கோவில் அறநிலை துறை அதிகாரியாக மகேந்திரன் சிலை செய்வதற்கு அனுமதி இல்லை என தடை விதித்துள்ளார். இதனால் சிலை செய்யும் பணி பாதியில் நின்று உள்ளது.

ஆகையால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபடக் கூடிய சிற்பிகள் மற்றும் ஒவியர்கள் சிறு விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விநாயகர் சிலை செய்ய தடை விதிக்கக்கூடாது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அரசு உத்தரவின்படி அரசு விதித்த கட்டுப்பாடு உடன் நடைபெற தேவையான நடவடிக்கைகள் மேற்ற்கொள்ளப்படும். ஆகையால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!