ராஜபாளையத்தில் காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குபுறம் மாற்றம்

ராஜபாளையத்தில் காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குபுறம் மாற்றம்
X

ஊருக்கு ஒதுக்குப்புறம் மாற்றப்பட்டுள்ள காய்கறிக் கடைகள்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராஜபாளையத்தில் இயங்கி வந்த காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறம் மாற்றப்பட்டுள்ளது.

ராஜபாளையம் காந்தி சிலை அருகே இயங்கும் தனியார் சந்தையில் 50க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை காய்கறி கடைகளும், பலசரக்கு, பழம் உள்ளிட்ட ஏராளமான உணவு விற்பனை செய்யும் கடைகளும் இயங்கி வந்தது.

12 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்ற நிலையில் சந்தையில் அதிகமாக கூட்டம் கூடியது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இன்று முதல் காய்கறி கடைகள் அனைத்தும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் காந்தி சிலை அருகே செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அனைத்தும், தற்போது மதுரை சாலையில் காவல் சோதனை சாவடி எதிரே உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள 19 காய்கறி கடைகளும் காலை 6 மணி முதல் 12 மணி வரை இயங்கும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காய்கறிகளை வாங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!