இராஜபாளையம்: சாஸ்தா கோவில் அணை நீர்தேக்கம் செல்ல இன்று முதல் அனுமதி

இராஜபாளையம்: சாஸ்தா கோவில் அணை நீர்தேக்கம் செல்ல இன்று முதல் அனுமதி
X

இராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் அணை நீர்தேக்கம் வனப்பகுதியில் இரண்டு வருடத்திற்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

சாஸ்தா கோவில் அணை நீர்தேக்கம் வனப்பகுதியில் இரண்டு வருடத்திற்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி.

இராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் அணை நீர்தேக்கம் வனப்பகுதியில் இரண்டு வருடத்திற்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி. சுற்றுசூழல் மாசு படுத்தும் பொருட்களை பயன்படுத்த அனுமதிப்பதாக வனத்துறையினர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சாஸ்தா கோவில் நீர்த்தேக்க அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஆறு மூலம் மழை நீரானது சாஸ்தா கோவில் நீர் தேக்கத்திற்க்கு வந்தடைகிறது.

கொரோணா விதிமுறை காரணமாக இப்பகுதி ஆற்றில் இரண்டு வருடங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ள நிலையில், இன்று முதல் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழலை மாசு படுத்தும் விதமாக பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மதுபானங்கள் என சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் எடுத்து சென்றனர். மேலும் வனப்பகுதிக்குள் சமையல் செய்வதற்கும் பாத்திரங்கள் கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சங்கர் என்ற வனப்பாதுகாவலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

மேலும் இது போன்ற சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கையால் வனப்பகுதிகள் உள்ள உயிரினங்களுக்கு தீங்கு ஏற்ப்படும் நிலை உள்ளது எனவே வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை முழுமையான சோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் பணம் பெற்று அனுமதித்த சம்பந்தப்பட்ட வனப்பாதுகாவலர் மீது மாவட்ட நிர்வாகம் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி