இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் துணைத் தலைவர் துரை கற்ப்பகராஜ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங் தங்கள் பகுதிக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், இதுவரை எந்தபணிகளும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு வைத்தார். மேலும் பள்ளி கட்டிடங்கள், பெண்கள் பயன்படுத்தும் சுகாதார வளாகங்கள், வாறுகால் போன்றவைகள் உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரிடமும், அதிகாரியிடமும் கேட்டுக்கொண்டார்
இதற்கு பதலளித்த ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தற்போது பணிகள் செய்ய போதுமான நிதி இல்லை எனவும், கிடைக்கும் நிதியில் ஒவ்வொரு பணிகளாக நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என பதிலளித்தார்.
மேலும் 21வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி கூறும்போது எங்கள் பகுதியில் பள்ளி கட்டிடங்களில் மேற்கூரை சேதமடைந்துள்ளதாகவும் நூலக வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அறிவுரை மூலம் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், கட்டிடங்களை சீரமைக்கவும், 20 ஆன்டிற்க்கு மேலான சேதமடைந்த கட்டிடங்களை இடிக்க பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu