ராஜபாளையம் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

ராஜபாளையம் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
X

ராஜபாளையம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை இம்மாதம் கொண்டாடப்படுவதையொட்டிஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் 1 மாதத்திற்கு முன்பே இதற்கான ஆயத்தப்பணிகளை வீடுகள் மற்றும் தேவாலயங்களில் செய்வார்கள். கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில்கள் அமைத்து நட்சத்திரங்களால் வீடுகளை அலங்கரிப்பார்கள். தேவாலயங்களிலிருந்து கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் சபை மக்கள் வீடுகளுக்கு பாடல்களைப் பாடிக்கொண்டு சென்று வாழ்த்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் இதன் தொடர்ச்சியாக ராஜபாளையம், தூய பவுல் தேவாலயத்தில் பாடகர் குழு சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி சபை குரு ஜே.ஜான் கமலேசன் தலைமையில் நடைபெற்றது. பாடகர் குழுவின் தலைவர் பிரேம் நார்மன் தலைமையில் பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர். கௌரவ குரு ஜோதிமணி வேத பாடங்கள் வாசித்தார். சபைகுரு ஜான் கமலேசன் தேவ செய்தி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!