இராஜபாளையம்: தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

இராஜபாளையம்: தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்
X

இராஜபாளையத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக - திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இராஜபாளையத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக - திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம்.

இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணியாளர்கள் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியதால் அதிமுக, திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம். அதிமுகவினர் வெளிநடப்பு அப்பகுதி சில மணிநேரம் பரபரப்பு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் தேர்தல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் முன்னிலையில் இப்பகுதியிலுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் அலுவலரிடம் புகார் அளித்தனர். புகாரின் போது அங்கு கூடியிருந்த திமுகவினர், அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் அலுவலர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தேர்தல் விதிமுறை மீறும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவியுறுத்தி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!