காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- போலீசார் விசாரணை

காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- போலீசார் விசாரணை
X

இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சாலையில் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தொடர்பாக சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சேத்தூர் ஆதிபுத்திர அய்யனார் கோவில் அருகே தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குவளைக்கண்ணி பகுதியைச் சேர்ந்த ரூபன் (42) என்பவர் இந்த பகுதியில் 10 ஏக்கரில் தென்னந்தோப்பு வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.வழக்கம்போல் தோப்புக்கு வெளியே தனக்கு சொந்தமான காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளார். திடீரென காரின் பின்பகுதி தீ பற்றி எரிவதாக பக்கத்து தோப்பு காரர்கள் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ரூபன், இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இது குறித்து சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அடிப்படையில் சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்ன காரணம் என விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!