உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீசார் கொடி அணி வகுப்பு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீசார் கொடி அணி வகுப்பு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறை கொடி அணிவகுப்பு 200க்கு மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்பு. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க வலியுறுத்தல்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே நேரு சிலையில் இருந்து இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொடி அணிவகுப்பு நடத்தினர். அணிவகுப்பில் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் 200க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்

காவலர்கள் அணி வகுப்பு பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் துவங்கிய பேரணி இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, வழியாக பெரிய மாரியம்மன் கோவில் திடலில் முடிவடைந்தது. வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!