கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு

கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு
X
ராஜபாளையத்தில் கொரோனாவால் மருத்துவர் உயிரிழந்த சோகம் .

ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பல் மருத்துவர் இளங்கோவன். இவர் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் ஆக்சிஜன் வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்.

ராஜபாளையத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் மருத்துவர் சாந்திலால், மருத்துவர் கோதண்டராமன் கொரோனாவுக்கு பலியான நிலையில் தற்போது பல் மருத்துவர் இளங்கோவன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!