இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்
இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு ACT GRANTS (ஆக்ட்கிராண்ட்ஸ்) மற்றும் CLEANMAX ENERGY PVT. LTD (க்ளீன்மேக்ஸ் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்), தனியார் நிறுவனம் சார்பில் 80 லட்சம் மதிப்பில் வழங்கபட்ட 200 படுக்கைகளுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் தேவைகளை பூர்த்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டி திறந்து வைத்தனர்
பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர்,
கொரோணா காலத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் விதமாக இந்த அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தில் பங்களிப்புடன் 80 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஒரு மாத காலத்திற்க்குள் பூர்த்தி செய்து தரப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்தார் நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஸ் M குமார் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் மருத்துவர்கள் செவலியர்கள் கலந்துகொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu