ராஜபாளையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

ராஜபாளையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை
X

ராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் முற்றிலும் எரிந்து சேதமான ஆட்டோ.

ராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீவைப்பு. தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

ராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோவுக்கு தீவைப்பு. தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது வீட்டின் அருகே சொந்தமான ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். தீடீரென நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்ததில் ஆட்டோ பற்றி எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீர் கொண்டு ஆட்டோவில் பற்றிய தீயை அணைத்து உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக தீவைத்தனரா?அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!