கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்

கொரோனா  தடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்
X
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஆர்.கண்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:

தற்போது, கொரோனாவின் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக முதல்வர் தடுப்புப் பணியில் வேகமாக ஈடுபட்டு வருகிறார். அவரைப் பார்த்து தடுப்பு பணியில் அமைச்சர் பெருமக்கள் நாங்கள் வேகமாக ஓடுகிறோம். எங்களைப் பார்த்து மாவட்ட ஆட்சியர்கள் வேகமாக ஓடுகிறார்கள். அதே போல் நீங்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இன்னும் 15 தினங்களுக்குள் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த வில்லை எனில் வளர்ச்சி பணியை செயல்படுத்த முடியாது.

இராஜபாளையம் நகராட்சி மாவட்டத்திலேயே பெரிய நகராட்சி ஆகும். இங்கு அதிக அளவில் தொழிற்சாலை உள்ளது. ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அதிக அளவில் உள்ளது. எனவே மக்கள் அதிக அளவில் கூட்டம் கூடும் பகுதியாக உள்ளது. இராஜபாளையத்தில் தான் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. அடுத்தபடியாக சென்ற ஆண்டு கொரோனா அதிக அளவில் இருந்தது. அதையும் நாம் கட்டுப்படுத்தினோம். எனவே உங்களுக்கு கொரோனா நோய் புதிதல்ல அதிகாரிகள் உங்கள் பணிகளை நீங்கள் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் அர்ப்பணிப்புடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளோம் இதில் மிகவும் மோசமாக இராஜபாளையம் உள்ளது என அமைச்சர் அதிகாரிகள் முன்பு வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலையில், இராஜபாளையம் பகுதியில் கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்பாடு செய்துள்ளோம் .

தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு 39 மருத்துவர்கள்,110 செவிலியர்கள் மற்றும் 124 மருத்துவ உதவியாளர்களை தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து உள்ளது‌. தேவைப்பட்டால் மேலும் பணியாளர்கள் நியமிக்க படுவார்கள்.

தனியார் மருத்துவமனைகளில் தொற்று ஏற்பட்டு இருந்தவர்களை அரசு மருத்துவமனையில் உடலை கொடுப்பதுபோல் முழுமையாக கவர் செய்து கொடுக்கவேண்டும் தனியார் மருத்துவமனையில் இறந்தவர்களுடைய எண்ணிக்கையும் கேட்டுள்ளோம் அதையும் பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் முழுமையாக ஊரடங்கு போட்டால் பொருளாதாரம் பாதிக்கப்படும் ஆகையால்தான் அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கினைத்து அவர்கள் முடிவு எடுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்

அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், கொரோனா தடுப்பு பணியை வேலையாக நினைக்காமல் சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் , இராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிங்கராஜ், மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை , மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!