இராஜபாளையத்தில் மாற்று கட்சியினர் 1,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு
இராஜபாளையத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இராஜபாளையத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள் திமுகவினரை அனுசரித்து செல்ல வேண்டும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பேச்சு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கர் மற்றும் தேவதானம் சேத்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ளவர்கள் தேவதானம் சேகர் தலைமையில் திமுகவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்தனர். இதில் அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன இதில் கலந்து கொண்ட விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசும் பேசும் நான் எம்ஜிஆர் இருந்த காலத்தில் நான் அதிமுகவில் இருந்தேன் எம்ஜிஆர் இறந்த பின்பு ஜெயலலிதா உடன் கருத்து வேறுபாட்டில் பிரிந்து திமுகவில் இணைந்த போது கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் தான் இறந்துவிட்டார் நான் இருக்கிறேன் வாருங்கள் என்று எங்களை அரவணைத்துக் கொண்டார். அதே போல் தற்போது அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தாய் கழகத்திற்கு வந்தவர்களை மனதார தளபதியும் ஏற்றுக் கொண்டுள்ளார் .
உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் நீங்கள் உண்மையாக உழைத்தால் உங்களுக்கு அதன் பலன் கிடைக்கும் என கூறினார். மேலும் திமுகவில் உள்ள திமுக கட்சியினரை நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும் என அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த நகரச் செயலாளர் உட்பட பலருக்கும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்சியில் மாவட்ட துணைசெயலாளர் இராசா அருண்மொழி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் துணைத்தலைவர் துரை கற்ப்பகராஜ் பொதுக்குழு உருப்பினர் கனகராஜ் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu