இராஜபாளையம் பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தேர்தல் பிரசாரம்

இராஜபாளையம் பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தேர்தல் பிரசாரம்
X

இராஜபாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பேசும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் 

இராஜபாளையத்தில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பொது மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர், தற்போது நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் , பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே பாலம் 6மாதங்களில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். ஆளுகின்ற அரசு, சட்டமன்ற உறுப்பினர் திமுக, வரும் தேர்தலில் நகராட்சி சேர்மனும் திமுக தான்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் நகராட்சி மிகப்பெரிய நகராட்சி. இங்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்த பிறகு தான் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார்.

Tags

Next Story
ai automation in agriculture