மேலவரகுணராமபுரம் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

மேலவரகுணராமபுரம் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
X

மேலவரகுணராமபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இராஜபாளையம் அருகே மேலவரகுணராமபுரம் நாடார் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் துவக்கம்.

இராஜபாளையம் அருகே மேலவரகுணராமபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஜமின் நல்ல மங்களம் ஊராட்சி மன்றத்திற்க்கு உட்பட்ட மேலவரகுணராமபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் தமிழக முதலவர் அறிவுறுத்தலின்படி முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களின் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாள் முதல் பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்கியுள்ளார். அதுபோல் தற்போது புதியதாக ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில் அத்தகைய வைரஸிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க தமிழக முதல்வர் அவர்கள் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு தயாராக உள்ளார் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு பள்ளி தாளாளர் நச்சாடலிங்கம் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கிளை செயலாளர் பாலமுருகன் கருப்பையா மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி