தளவாய்புரம் ஊராட்சியில் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
தளவாய்புரம் ஊராட்சியில் உள்ள தனியார் ஆரம்பப்பள்ளியில் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாமை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சியில் உள்ள தனியார் ஆரம்பப் பள்ளியில் தமிழக முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களின் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாமை இணை இயக்குனர் கலுசலிங்கம் முன்னிலையில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்ததிற்கு காரணம் தமிழக முதல்வர் அவர்களின் சீரிய முயற்சியும் மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பு தான் காரணம் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் மருத்துவத்துறையில் பொதுமக்களின் நலன்காக்க பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுத்தி வருகிறார்.
தற்போது சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் நம்மை காக்கும் 48 திட்டம் என்ற மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம் லட்சக்கணக்கான ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெற உள்ளார்கள் எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கலைஞர் கண்ணொளி திட்டத்தின் கீழ்பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu