மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி துவக்கம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி துவக்கம்
X
ராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி துவக்கம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னம் பொறிக்கும் பணி நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து கட்சி சார்பில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு சின்னம் அமைக்கும் பணியினை பார்வையிட்டனர். தகுதி உள்ள 42 வார்டுகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி முடிந்தவுடன் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை முன்னிலையில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்