கொரோனா தொற்று அதிகரிப்பு .தொற்று பரவும் அபாயம்...

கொரோனா  தொற்று அதிகரிப்பு .தொற்று பரவும் அபாயம்...
X
Risk of infection

இராஜபாளையம் அருகே முகவூர் முத்துச்சாமிபுரம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பு .இருந்தும் கிருமி நாசினி போன்ற மருந்துகள் தெளிக்காததால் நோய் தொற்று பரவும் அபாயம் என பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் முத்துசாமிபுரம் சாலியர் தெரு பகுதியில் கொரோனா தொற்றினால் 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து கட்டுபாட்டு பகுதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் அறிவித்தனர். மேலும் சுகாதாரதுறை சார்பில் அப்பகுதியில் இதுவரை கிருமி நாசினி மருந்து தெளித்தல் மற்றும் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.மேலும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர்.மேலும் அதிகாரிகளின் அலட்சியத்தால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்த பகுதியில் இருந்து மக்கள் பலரும் இயல்பாக வெளியில் சுற்றித் திரிவதால் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india