ராஜபாளையம் தாெகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் உடனடி தீர்வு: எம்எல்ஏ அதிரடி

ராஜபாளையம் தாெகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் உடனடி தீர்வு: எம்எல்ஏ அதிரடி
X

இராஜபாளையம் பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பொதுமக்களை நேரடியாக சந்திந்து அவர்களின்  கோரிக்கைகளுக்கு எம்எல்ஏ உடனடி தீர்வு மேற்காெண்டார்.

இராஜபாளையம் பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எம்எல்ஏ உடனடி தீர்வு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 42,41,40,39. வார்டு பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்தும் வீடு வீடாகவும் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுவை பெற்று உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் உடனடியாக தீர்க்க முடியாத கோரிக்கைகளை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் கவனதிற்கு கொண்டு சென்று விரைந்து தீர்வு காணப்படும் எனக் கூறினார்

இந்நிகழ்வில் பொதுமக்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தின் வழியில் நமது இராஜபாளையம் தொகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பொதுமக்களை சந்தித்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி சேவை செய்ய தமிழக முதல்வர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR. இராமச்சந்திரன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவுறுத்தி உள்ளார் எனக் கூறினார்.

மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பொதுமக்களின் குறைகளை போக்கவும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர் அவர் வழியில் நான் இராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருப்பேன் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் இராஜபாளையம் நகரில் இன்னும் மூன்று மாதங்களில் 24 மணி நேரமும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படவுள்ளது எனவும் விரைவில் ரயில்வே மேம்பாலப்பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது எனக் கூறினார். மேலும் முதியோர்களுக்கு நியாய விலைக்கடைகளில் கைரேகை விழவில்லை அதனால் பொருட்கள் வழங்கப் படுவதில்லை கூறினர். அவர்கள் உதவியாளர்கள் அல்லது உறவினர்கள் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து சட்ட மன்ற உறுப்பினர் அலுவகத்தில் கொடுத்தால் நாங்களே அதற்கான அனுமதி பெற்று தருவதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நகர (தெற்கு) பொறுப்பாளர் ராமமூர்த்தி நகராட்சி உதவிப்பொறியாளர் கோமதிசங்கர் பிட்டர் சிவராமன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி மற்றும் வார்டு செயலாளர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story