ராஜபாளையத்தில் பலத்த மழை: நள்ளிரவில் வீடு இடிந்து சேதம்
இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சேதமானது.
இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக கூலித்தொழிலாளி குடும்பத்துடன் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது 35). பெயிண்டராக கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு வீட்டில் இருந்த பொழுது நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது .
அது சமயம் வீட்டின் சுவர் இடியும் கீரல் விழ ஆரம்பித்தவுடன் ராக்கப்பன் அவரது மனைவி அய்யம்மாள் மற்றும் 3 குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மழையின் காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சேதமடைந்ததை அடுத்து தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தவர்களை அக்கம் பக்கத்து வீட்டார்கள் அவர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர் .
வீடு சேதம் அடைந்த இடத்தைவருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu