இராஜபாளையம் பகுதியில் அனுமன் ஜெயந்தி: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
அஷ்ட வரத ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
தமிழகம் முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பல்வேறு கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோவிலில் அதிகாலை 4 மணி முதல் கும்ப ஜெபம், கணபதி ஹோமம், ஆஞ்சநேய ஹோமம் ,16 வகை அபிஷேகங்கள் தீப ஆராதனைகள் விநாயகர் மற்றும் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு நடைபெற்றது. அஷ்ட வரத ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
மேலும் இந்த கோவிலுக்கு வருகை புரிந்த மதுரை ஆதீனம் பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக் காண ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அசையாமணி விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 10 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலைக்கு வெற்றிலை துளசி, மாலை அணிவித்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ராம பக்த ஆஞ்சநேயருக்கு ராஜ தீபாராதனை ஏற்றப்பட்டது நிகழ்வில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.
மேலும் இன்று இந்த கோவிலில் 5 அலங்காரங்களில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்து சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu