தோப்பூர் பகுதியில் மழைநீரில் மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி

தோப்பூர் பகுதியில் மழைநீரில் மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி
X

இராஜபாளையம் அருகே தோப்பூர் பகுதியில் மழைநீரில் சாலை மூழ்கியதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இராஜபாளையம் அருகே தோப்பூர் பகுதியில் ஆறாக மாறிய சாலை 70 க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் தவிப்பு.

இராஜபாளையம் அருகே தோப்பூர் பகுதியில் ஆறாக மாறிய சாலை 70 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவிப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் இருந்து வன்னியம்பட்டி செல்லக்கூடிய சாலையில் தோப்பூர் கிராமம் உள்ளது இந்த பகுதியில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த நான்கு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக கண்மாய் நிறைந்து அதிலிருந்து வெளியேறி கூடிய தண்ணீர் ஆறு போல் சாலையில் ஓடுகிறது. தரைப்பாலமும் மூழ்கியதால் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலைகளில் இருபுறமும் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சாலையில் செல்லும் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு கல் மணல் வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா